இலங்கையில் பௌத்த பல்கலைகழகம் ஆஸி. நிறுவனம் நிதியுதவி

இலங்கையில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பௌத்த பல்கலைக்கழகத்தை நிர்மாணப்பணிகளுக்கு 2 ஓ.ஆர். என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ததிரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

அதன் தலைவரும் அவுஸ்திரேலிய ஒரியன்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான Jun Hong Lu உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையில் பௌத்த மதச் செயற்பாடுகளின் வளர்ச்சிக்காக தமது நிறுவனத்தின் ஊடாக வழங்கக்கூடிய பங்களிப்புத் தொடர்பாக பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியிடம் கலந்துரையாடினர். 40 உலக நாடுகளின் பௌத்தமத நலன்புரி சங்கங்களுடன் இணைந்து தமது நிறுவனம் செயற்படுவதுடன், பௌத்த மதத்தை உலகம் பூராகவும் பரவச்செய்வதே தமது குறிக்கோளாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக இளைய தலைமுறையினருக்கிடையே பௌத்த மதத்தை முன்னெடுத்து அவர்களை ஆன்மீக ரீதியில் ஆமம்படுத்துதல் தமது நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோள் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]