இலங்கையில் சீனாவின் முதலீடு குறித்து அவசரப் பேச்சுவார்த்தை

இலங்கையில் சீனாவின் முதலீடு குறித்து அவசரப் பேச்சுவார்த்தை

இலங்கையில் சீனாவின் முதலீட்டினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் அவசரப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (செவ்வாய்கிழமை)இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு ஒன்றே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது, இலங்கையில் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டதோடு, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு நன்மையளிக்கும் திட்டங்களில் எழுகின்ற பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சீனக் குழுவிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]