இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு ராகுல் காந்தி

இலங்கை உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையிலான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறார். இது இந்தியாவின் அனைத்துலக நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது.

சீனா எல்லை இடங்களிலும் தலையீடு செய்கிறது. நேபாளத்தில் டோக்லம், இலங்கை, மாலைதீவுகள், மியான்மார் என்று எல்லா இடங்களிலும் சீனாவின் தலையீடுகள் உள்ளன.

ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகள் விரிவடைந்து வருகின்றன. இந்த நிலையில், உலக ஒழுங்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு மாற்றான மூன்றாவது சக்தி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]