இலங்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள க்ளைபோசேட் இரசாயனத்தை கடத்த முயற்சித்த 2 பேர் கைது

இலங்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள க்ளைபோசேட் இரசாயனத்தை கடத்த முயற்சித்த 2 பேர் கைது

இலங்கையில் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள க்ளைபோசேட் இரசாயனத்தை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயற்சித்த இரண்டு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பிரதேசத்தில் இவர்கள் நேற்று காலை வேளையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் வசமிருந்த 710 கிலோ க்ளைபோசேட் இரசாயன நாசினி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இந்தியவர்கள் இலங்கை கடற்தொழிலாளர்கள் என்ற போர்வையில், இந்த இரசாயனத்தை கடத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட இரண்டு இந்தியர்களும் கைபற்றப்பட்ட இரசாயனம் உள்ளிட்ட பொருட்களும் கடற்படையினரால் மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு க்ளைபோசேட் இரசாயனம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதோடு, அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் கோரிக்கைக்கு அமைய கடும் கட்டுப்பாடுகளுடன் சிறுதொகை க்ளைபோசேட் கொள்வனவிற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]