இலங்கையில் ஐந்தாயிரம் ரூபாய் நாயணத்தாள்கள் ஐம்பதாயிரம் ரூபாயாக மாறிய விசித்திர சம்பவம்

இலங்கையில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்து தீவிர விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பெருந்தொகையான ஐந்தாயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாயணத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாளில் ஒரு பூஜ்ஜியம் அதிகரித்து ஐம்பதாயிரம் ரூபாய் நாணயத்தாளாக அச்சிடப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் இருவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில,

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.எனினும், விசாரணைகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஐம்பதாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை அண்மையில் குருநாகல் பகுதியில் இருந்து பொலிசார் கைப்பற்றியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]