இலங்கையில் எச்.ஐ.வி கிருமிகளினால் பாதிக்கப்பட்டோரில் – அதிகமானோர் ஆண்கள்

இலங்கையில் எச்.ஐ.விஇலங்கையில் எச்.ஐ.வி கிருமிகளினால் பாதிக்கப்பட்டோரில், அதிகமானோர் ஆண்கள் என இலங்கை எயிட்ஸ் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர். சிசிர லியனகே பேசிய போது, இந்த வருடம் கடந்த ஆறு மாதங்களுக்குள் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 131 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் 90 பேர் ஆண்கள் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 0.0021 சதவீதம் பேர் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டோர் என்று கூறிய டாகடர். லியனகே, தெற்காசியாவில் மிகக்குறைவாக எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]