இலங்கையில் உள்ள பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டே,இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் சமூக பதற்ற நிலையினால், இலங்கை அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை பிரகடனம் செய்துள்ளதுடன், கண்டி மாவட்டம் உள்ளிட்ட சில இடங்களில் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் மேலும் சம்பவங்கள் நிகழும் சாத்தியங்கள் உள்ளன. உள்ளூர் ஊடகங்களின் அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பனவற்றினால், சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு இருக்காது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.