இலங்கையில் இடம்பெற்ற விடயங்களை தென்னாபிரிக்காவுடன் ஒப்பிட முடியாது – நவநீதம் பிள்ளை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னாபிரிக்க பாணியில் மறப்போம் மன்னிப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளமை குறித்து முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை என நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம்  நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதி செய்வதாக உறுதியளித்தது எனினும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியை பெற முயல்வதன் மூலம் பின்னோக்கி செல்ல முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக  அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற விடயங்களை தென்னாபிரிக்காவுடன் ஒப்பிட முடியாது எனவும் இங்கு பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்டுழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் குறிப்பிடுவது போன்று தென்னாபிரிக்க மக்கள் வழக்குதாக்கல் செய்யாமலிருக்கவில்லை,கடந்த மாதம் கூட பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தவர்கள் பொலிஸாரிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]