இலங்கையின் வாக்குறுதி தொடர்பில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம்

ஜெனிவாவில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையானரினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அடுத்து, நடந்த விவாதத்திலேயே, ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தின.

அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள், இணைந்து, நேற்றைய அமர்வின் போது கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட;டன.

“அதில், “இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் அதிகார மீறல்களில் ஈடுபடுவதாக வரும் அறிக்கைகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“மதங்களுக்கிடையிலான வன்முறை, தாக்குதல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான இனவெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள், நல்லிணக்க முயற்சிகளின் தேவையை வலியுறுத்தியிருக்கின்றது.

“30/1 தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி ஒப்புக்கொண்டது போல, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலம், அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், நிலையான அமைதி, மற்றும் வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீள நிகழாமையுடன் இணைந்ததாக உள்ளது.

“அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களின் குடும்பங்கள், பதில்களுக்காக நீண்டகாலம் காத்திருக்கிறார்கள். எனவே காலதாமதமின்றி, காணாமல் போனோர் பணியகம், முழுமையாக செயற்பட வேண்டும்.

“34/1 மற்றும் 30/1 தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான, செழிப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்று இணை அனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]