இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் – ஐநா எச்சரிக்கை

இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் – ஐநா எச்சரிக்கை

இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள்முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்க் குற்ற வழக்கு, இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.

இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் தனது இரண்டு வார கால விஜயத்தின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் 2009ஆம் ஆண்டு, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் காணாமல் ஆக்கப்படுவதற்கும், சித்திரவதை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்த இராணுவ குழுக்களுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார் என தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமை குழுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜயசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்த மோதல்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உரிய நம்பகமான பொறுப்பு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் பப்லோ டி கிரிவ் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதற் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்த அவர், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்துடன், நான்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]