இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது

இலங்கையின் புதிய வரைப்படம் நாளை (31) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் புதிய வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]