இலங்கையின் தாய் மரண வீதத்தில் வீழ்ச்சி

இலங்கையின் தாய் மரண வீதத்தில் வீழ்ச்சி

2016ஆம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை குடும்ப சுகாதார அலுவலக பணிப்பாளர் வைத்தியர் பிரியானி சேனாதீர மற்றும் சமூக வைத்திய நிபுணர் கபில ஜெயரத்னவால் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தெற்காசிய நாடுகளில் குறைவான தாய் மரணங்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், பிரசவத்தின் பின்னராக இரத்தப் போக்கு, இருதயக் கோளாறு காரணமாக நேரடியான தாய் மரணங்கள் இவ் வருடம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

43 வீதமான தாய் மரணங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளாமையால் ஏற்பட்டுள்ளதோடு, 20 மரணங்கள் குடும்பத்தினரின் உரிய பராமரிப்பு இல்லாமல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார பணியாளர்களின் தாமதங்கள் 44 தாய் மரணங்கள் ஏற்பட நேரடியான மற்றும் மறைமுக காரணங்களாக அமைந்துள்ளன எனவும் அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]