இலங்கையின் கடற்பிராந்தியத்துக்குள் 9 போர்க் கப்பல்கள் வருகைதரவுள்ளன

இலங்கையின் கடற்பிராந்தியத்துக்குள் 9 போர்க் கப்பல்கள் வருகைதரவுள்ளன

போர்க் கப்பல்கள்

இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க் கப்பல்கள் வருகை தரவுள்ளனவெனத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டுக்குச் சொந்தமான Somudra Avijan என்ற போர்க் கப்பல், கொழும்புத் துறைமுகத்தை நேற்று (25) வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போர்க் கப்பல்கள், இலங்கைக்கு வருகைதரவுள்ளனவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தென்கொரிய போர்க் கப்பல்கள் இரண்டு, கொழும்புத் துறை​முகத்தை இன்று (26) வந்தடையவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]