இலங்கையர் ஒருவரைக் அடித்துக் கொலை

மலேஷியாவில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ததாக, இந்திய ஊழியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி காலை சுமார் 09.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்தில் சந்தேகநபருடன் பணி புரிந்த 50 வயதான, சுமித் நிஷாந்த சில்வா என்ற இலங்கையரே மரணித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும், இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதான துர்க ரோ கெட்டலி எனும் இந்தியப் பிரஜையாகும்.

ஊழியர்கள் தங்கும் விடுதியில் வைத்து, நடைபெற்ற வாக்கு வாதம் வலுவடைந்ததை அடுத்து, துர்க ரோ கொங்கிரீட் துண்டு ஒன்றினால் சுமித்தைத் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சுமித் நிஷாந்த பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.