இலங்கைப் பொலிஸ்துறையின் சீருடை நிறத்தை மாற்றுவதற்கு ஐந்து நிறங்கள் முன்மொழிவு

இலங்கைப் பொலிஸ்துறைக்கான சீருடையின் நிறத்தை மாற்றுவது தொடர்பில் அமைச்சுகள் உபட்ட உயர்மட்ட துறைகளின் கருத்துகளை பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளார்இலங்கைப் பொலிஸ்துறையின்

இது தொடர்பான கடிதத்துடன், 16 கேள்விகளை உள்ளடக்கி வினாக்கொத்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வினாக்களுக்கு அருகில், ‘உறுதியாக ஏற்கிறேன்’, ‘ஏற்கிறேன்’, ‘நடுநிலை’, ‘ஏற்கவில்லை’ எனக் குறிப்பிடப்பட்ட நிரல்கள் இருக்கின்றன.

அத்துடன், ஐந்து வகையான நிறங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

1.வெள்ளைநிற சட்டை ( சேட்) , கருப்புநிற காற்சட்டை (டவுசர்)
2. இளநீலநிற சட்டை, கடும்நீலநிற காற்சட்டை
3. இளசாம்பல்நிற சட்டை, கடும்சாம்பல்சிற காற்சட்டை
4. லைட் பிரவுன் சட்டை, காக்கி காற்சட்டை
5. தற்போது அமுலில் இருக்கும் சீருடை

பல்துறைகளிடமிருந்தும் கருத்துகளைப் பெற்ற பின்னர் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிறமே தெரிவுசெய்யப்படும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]