இலங்கைக்கு 75 ஆயிரம் மெட்றிக் யூரியா அனுப்ப பாகிஸ்தான் நடவடிக்கை

இலங்கைக்கு 75 ஆயிரம் மெட்றிக் யூரியா அனுப்ப பாகிஸ்தான் நடவடிக்கை

இலங்கையின் அவசர கோரிக்கையை ஏற்று, 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரத்தை அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இணங்கியுள்ளார்.

இலங்கையில் யூரியா உரத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து, அமைச்சரவையில் ஆராயப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உதவியைக் கோரியிருந்தார்.

இதையடுத்து உடனடியாக 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரத்தை முன்னுரிமை அடிப்படையில் இலங்கை அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]