இலங்கைக்கு வருகிறது ஜப்பான் வர்த்தகக் குழு

ஜப்பான் வர்த்தகக் குழு

இலங்கைக்கு வருகிறது ஜப்பான் வர்த்தகக் குழு

ஜப்பானின் உயர்மட்டக் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட குழுவே இவ்வாறு வரவுள்ளது.

இவ்வாறான உயர் அதிகாரம் கொண்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளின் குழுவொன்று 40 ஆண்டுகள் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தக் குழுவில், ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான, டொயோட்டா, ஹொண்டா, மிட்சுபிசி, சுமிரோமோ, மிட்சுயி ஜப்பான் எயர்லைன்ஸ், ஈஸ்ரேர்ன் வங்கி, ரோக்கியோ மிட்சுபிசி வங்கி, நிப்பொன் எயர்வேய்ஸ், நிப்பொன் ஸ்டீல்ஸ் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களுடனும் இந்தக் குழுவினர் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]