இலங்கைக்கு வதிவிட ஆலோசகரை வழங்குகிறது அமெரிக்கா

இலங்கைக்கு வதிவிட ஆலோசகரை வழங்குகிறது அமெரிக்கா

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு உதவி செய்வதற்காக வதிவிட சட்ட ஆலோசகர் ஒருவரை இலங்கைக்கு, அமெரிக்கா வழங்கவுள்ளது.

கொழும்பில் தங்கியிருந்து, அவர் ஆலோசனைகளை வழங்குவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சொத்துக்களை மீட்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் அவர் இலங்கைக்கு உதவி செய்யவுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர், வொஷிங்டனில் நடந்த பூகோள சொத்து மீட்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]