இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்கும் அவுஸ்திரேலியா

இலங்கைக்கு இந்த ஆண்டு மேலும் மூன்று ரோந்துக் கப்பல்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலிமையாக்கும் நோக்கத்தில் இந்தக் கப்பல்கள் வழங்கப்படவுள்ளன.

போர்ட் வகையை (Port Class vessels) சேர்ந்த மூன்று கண்காணிப்புக் கப்பல்கள் இலங்கைக்கு இந்த வருடத்தில் வழங்கப்படும் என, அவுஸ்திரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்சிசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை கடற்படைக்கு அவுஸ்திரேலியா வழங்கியிருந்த இரண்டு பே வகை (Bay Class) கண்காணிப்புக் கப்பல்களுக்குத் தேவையான இரண்டு இயந்திரங்கள் காலி துறைமுகத்தில் நேற்று கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரைஸ் ஹட்சிசன், மேலும் மூன்று கண்காணிப்புக் கப்பல்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]