குடியுரிமை கோரும் நாடு திரும்பிய இலங்கையர்கள்

இலங்கைக்கு மீள நாடுதிரும்பியோர்களில் 242 பேர், மன்னாரில் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் நடமாடும் சேவையின்போது இலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் மன்னார் நகர மண்டபத்தில் இந்த நடமாடு சேவை நடத்தப்பட்டது.

யுத்தத்தின்போது இலங்கையிலிருந்து வெளியேறி, பின்னர் மீண்டும் தாயகம் திரும்பியோரின் நலன்கருதி இந்த நடமாடும் சேவை முன்னெக்கப்படுகிறது.

இதன்போது 59 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், குடியுரிமை மற்றும் பிறப்புச் சான்றிழதல் என்பன தொடர்பில் சம்பந்தப்பட்டோருக்கு உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

வெளிவிவகார, அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் குடியுரிமை தொடர்பான பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையின் முதற்கட்ட நடவடிக்கை கடந்த ஜுலை மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இதன்போது குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான 201 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேநேரம் 61 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]