இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமா? இன்று ஜெனிவாவில் தீர்க்கமான முடிவு

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ராட் ஹுனைசின் இலங்கை தொடர்பிலான அறிக்கை இன்று அவரால் மனிதவுரிமைகள் பேரவையில் முன்மொழியப்படவுள்ளது.

செய்ட் அல் ராட் ஹுசைன்
செய்ட் அல் ராட் ஹுசைன்

ஜெனாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களும் ஆணையாளர் இலங்கைத் தொடர்பில் இதனை வலியுறுத்தவுள்ளார் என்பதை எதிர்பார்த்துள்ளன.

முன்னதாக இலங்கைத் தொடர்பிலான எழுத்துமூல அறிக்கையை செய்ட் அல் ஹுசைன் வெளியிடவிருந்த தருணத்தில் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் ஆழமான கருத்தகள் இதுவும் மனிதவுரிமைகள் பேரவையில் முன்மொழியப்படவில்லை என்பதால் இலங்கை அரசுக்குச் சார்ப்பான ஒரு அறிக்கையையே ஆணையாளர் முன்வைப்பார் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால், அவரின் அறிக்கை எவரும் எதிர்பாராது போல் கடுமானதான அமைந்திருந்தது. குறிப்பாக இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் கவலையளிப்பவையாக உள்ளதாக வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவம், காணாமல் போனோர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டும் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்காமை, கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் ஸ்தாபிக்கும் வகையில் அரசமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும், ஐ.நா. கிளை பணிமனையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான பொறிமுறையென்றை கண்டறிதல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விடயங்களை அழுத்தமாக இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழலிலேயே இன்று அவரின் அறிக்கை வெளியாகவுள்ளது. என்றாலும், இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற என்ற வார்த்தையை திருத்தியமைக்கப்படவுள்ள 2015ஆம் நிறைப்பட்ட அறிக்கையில் இருந்து நீக்கிக்கொள்ள கடும் பிரயசித்தங்களை ஐ.நாவில் மேற்கொண்டு வருவதுடன், இதற்கு ஆதரவளிக்கும் படி உபக்குழு விவாதங்களில் மனிதவுரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
என்றாலும், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் அமெரிக்கா,பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், நோர்வே, ஜேர்மன், மொன்ரானிக்ரோ மசிடோனியா உள்ளிட்ட நாடுகள் கலப்பு நீதிமன்றம் என்ற வார்தையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளன.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடக ஜெனிவாவில் முகாமிட்டுள்ளவர்கள் முன்னதாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 6ஆம் மற்றும் எட்டாம் பந்திகள் கட்டாயம் தீர்மானத்தில் இருக்க வேண்டும் என்பதுடன், அதனை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கலாம் என உபக்குழு விவாதங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இன்று வெளியாவுள்ள மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைத் தொடர்பில் மனிதவுரிமைகள் பேரவையின் இறுதி நிலைப்பாடு என்னவென்று உறுப்பு நாடுகளுக்கு தெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார். இவருடைய இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசீரவு கலந்துகொள்ளவுள்ளதால் இன்றைய ஜெனிவா மாநாட்டுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வாவே தலைமை தாங்களவுள்ளார்.

மனிதவுரிமைகள் பேரவையிக் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர் ஐ.நாவுக்கான இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உரையாற்றவுள்ளார். அத்துடன், அரச மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் சார்பில் தமிழ் தலைமைகளும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.