முகப்பு News Local News இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம்?

இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம்?

இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தீரமானமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொண்டுவரப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் பிரதீபா மஹாநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுதத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com