இலங்கைக்கு உதவ தென்கொரியா இணக்கம்

குப்பையை பயன்படுத்தி சிறிய அளவிலான மின் உற்பத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தென்கொரிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தென்கொரிய தூதுவருக்கும், அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் பணிகளை விரிவான முறையில் முன்னெடுக்க தென்கொரியா ஆதரவு வழங்கும் என்று தென்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் பணிகளை விரிவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும், வளங்களையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் , இதற்கமைவாக 190 கழிவகற்றும் இயந்திரங்கள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]