இலங்கைக்கு உதவிசெய்ய தயார் – ஜப்பான்

ஜப்பான்

இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று பிற்பகல் சந்தித்து இதனை தெரிவித்தார்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளை, இதேஇரு நாடுகளுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்பட்டுவருவதாகவும், இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து மேலும் கண்டறிய விசேட தூதுக்குழுவொன்றை இம்மாதம் கடைசியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]