இலங்கைக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் தொடங்கி உள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி இதில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

அதே சமயம் சொந்த மண்ணில் இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்ய தென்ஆப்பிரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.