முகப்பு News Local News இலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபாய் நன்கொடை

இலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபாய் நன்கொடை

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாயை (8000 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் பிரதமர் செயலகம், இறுதிக்கட்ட பேச்சுக்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com