இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடியான விமான சேவை

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடியான விமான சேவையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கைக்கும்
அதிகளவிலான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்விதமான நேரடி விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை.

அதிகாரிகள் மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]