இலங்கைக்கான 4 புதிய இராஜதந்திரிகள் நியமனம்

இலங்கைக்கான 4 புதிய இராஜதந்திரிகள் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

குறிந்த சந்திப்பானது, கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதோடு, இதன்போது, புதிய இராஜதந்திரிகள் நால்வரும் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் நால்வரும், சுவிட்சர்லாந்து, கௌதமாலா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் மலேசியா, சாம்பியா நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் பெயர்கள் விபரங்கள் பின்வருமாறு,

01. Mr. Hanspeter Mock – Ambassador of Switzerland

02. Mr. Geovani Rene Castillo – Ambassador of Guatemala

03. Mr. Tan Yang Thai – High Commissioner of Malaysia

04. Ms. Judith Kangoma Kapijimpanga – High Commissioner of the Republic Zambia

இதன்போது புதிய இராஜதந்திரிகளிடையே உரையாற்றிய ஜனாதிபதி, நியமனம் பெற்றுள்ள இப் புதிய இராஜதந்திரிகள் சர்வதேச ஒத்துழைப்புடன் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் பயணத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என தாம் எதிர்பார்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான

இலங்கைக்கான இலங்கைக்கான இலங்கைக்கான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]