முகப்பு News இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா தெரிவு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா தெரிவு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிலிட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குரல்மூல வாக்கெடுப்பின் மூலமே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, டிரம்பின் இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனெட் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இலங்கைகான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘இலங்கைக்கான புதிய தூதுவராக அலைனா பி டெப்பிலிட்ஸின் நியமனத்திற்கு, அமெரிக்க செனட் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக எங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, புதிய தூதுவரை வரவேற்பதற்கு காத்திருக்கின்றோம்’ என பதிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஸ்ட இராஜதந்திரியான டெப்பிலிட்ஸ் இறுதியாக நேபாளத்திற்கான தூதுவராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com