இலங்கைக்கான தூதுவர்கள் மூவர் நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்ததுள்ளனர்

இலங்கைக்கான தூதுவர்கள் மூவர் நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்ததுள்ளனர்.

இலங்கைக்கான தூதுவர்கள்

தாய்லாந்து தூதுவர் சுலாமனீ சார்ட்சுவான், எஸ்டோனியா குடியரசு தூதுவர் ரிஹோ குரூ, பெரு குடியரசு தூதுவர் ஜோர்ஜ் ஜுவான் கஸ்டனிடா மெண்டிஸ் ஆகியோர் அவர்களின் நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

சிறந்த நட்புறவுகளை பேணி வரும் நாடுகள் தமக்கிடையே உறுதியான நீண்ட கால இருதரப்பு உறவுகளை உறுதிசெய்வதற்கு பொருளாதார கூட்டுறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தூதுவர்களிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான தூதுவர்கள்

நட்ப்புறவு நாடுகளுடன் பலமான பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளைப் பேணுவதற்கு நம்நாடு விரும்புவதாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இலங்கைக்கான தூதுவர்கள்

நம் நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான தூதுவர்கள்

வெளிநாட்டு விவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாந்து, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]