அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம், கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரே இவ்வாறு கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இவர்கள் நால்வரும் நாடு கடத்தப்படுவதற்காக பேர்த் விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு விமானம் ஒன்றில் ஏனைய இலங்கையர்களுடன் ஏற்றப்பட்டனர்.
இந்நிலையில், சற்று நேரத்தின் பின்னர் அங்கு வந்த அவுஸ்திரேலிய அதிகாரிகள், அவர்களை விமானத்தில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
இறுதி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்தே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – info@universaltamil.com