இறுதியாக கிடைத்த தகவலின் படி பாராளுமன்றம் எதிர்வரும் 7ம் திகதி கூட்டப்படும்- சபாநாயகர் திட்டவட்ட அறிவிப்பு

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

எனினும் புதிய பிரதமர் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வரை சர்ச்சைகள் தொடரும் ஆபத்து குறித்து பலரும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி தெரிவித்தார் என புதிய பிரதமர் மஹிந்த தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இந்த திகதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இறுதியாக கிடைத்த தகவலின் பிரகாரம் , எதிர்வரும் 7ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து 7ம் திகதி பாராளுமன்றத்தை கூடுமாறு பணித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பிலேயே சபாநாயகர் இந்த புதிய அறிவிப்பை கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]