இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் எழுதவேண்டியதை முன்கூட்டியே கூறிய கலைஞர்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தற்போது ராஜாஜி ஹோலில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக கழகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டதற்கமைவாக மெரினாவில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை தற்போது தயாராகி வருகிறது. அதில் ”இறுதி ஊர்வலத்துக்காக ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்,” என பொறிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே அறிவித்திருக்கிறார். அது ”ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான்’.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]