இரு மத பிரிவினரிடையே மோதல்

மட்டக்களப்பு வாழைச்சேனை மருதநகர் பகுதியில் இரு மதப் பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (17) காலை வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மருதநகர் மற்றும் பேத்தாழை போன்ற பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மதப்பிரிவினர் தங்கள் வழிபாட்டு நிலையத்தில் வழமைபோல் ஆராதனையில் இருந்தவேளை மற்றுமோர் பிரிவினர் அங்கு நுழைந்ததனை அடுத்து இரு தரப்பினருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை

இதன் காரனமாக பலத்த காயங்களுக்குள்ளான இரு தரப்பினரையும் சேர்ந்த 4பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரு பெண்கள் அடங்குவர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை

கல் வீச்சு சம்பவத்தினையடுத்து வழிபாட்டு தளங்களின் ஜன்னல் மற்றும் கூரைப் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இது தொடர்பாக கல்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை

இதேபோல் வாகரை பிரதேசத்தில் சேமக்காலை காணி தொடர்பாக இரு பிரிவினருக்கிடையில் அமைதியற்ற சூழ் நிலை காணப்பட்டது. இதனால் வாகரை திருமலை வீதியில் போக்குவரத்து சிறிது நேரம் தாமதமானதாகவும், வாகரை பொலிசார் நிலமைகளை வழமைக்கு கொண்டு வந்ததாகவும் வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை

இதேவேளை சம்பவத்தினை கேள்வியுற்ற மட்டக்களப்பு தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சம்பவ இடம் மற்றும் வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று பாதிக்கபட்டவர்களை பார்வையுற்றதுடன் நிலமைகளை கட்டுப்படுத்தும் முகமாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]