இரு பெண்களை கொலைசெய்த சந்தேக நபர் கைது

ஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்த சந்தேகத்திற்குரியவர், வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 68 வயதான பெண் மற்றும் அவரின் மகள் கொலை செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரியவராக மகளின் கணவர் வெலிகந்த பிரதேசத்தில் உறவினர் ஒருவர் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரியவர் மேலதிக விசாரணைகளின் பொருட்டு ஹங்வெல்ல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]