இரு இலங்கையர்கள் கைது

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய ஆவணங்கள் இல்லாதல் பணம் கொண்டு வந்ததாக இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 80 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் சட்டத்திற்கு புறம்பாக கடத்த முற்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 5-ம் திகதி இதே விமான நிலையத்தில் 5 கிலோ கிராம் அளவிலான நார்கோட்டிக் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.