இரு வேறு இடங்களில் தீ

இரு வேறு இடங்களில் தீ

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதியில் இன்று (01) தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குப்பைச் சரிவு அனர்த்தம் ஏற்பட்டதும் இதே பிரதேசத்தில் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் இரண்டு மற்றும் 3 பௌஸர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தெஹிவளை, அத்திடிப் பகுதியில் அமைந்துள்ள பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று 1ஆம் திகதி அதிகாலை தீ பரவியுள்ளது.

இதனையடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தள்ளதாக, கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்த தீப்பரவலால் பொலித்தீன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பல இரசாயனப் பொருட்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]