இருவீட்டார் சம்மதத்தோடு நடந்து முடிந்த நயன்- விக்னேஷின் நிச்சயதார்த்தம்!!

நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்தோடு நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவர்களின் திருமணம் பற்றி கேட்டால் இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழாவில் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று கூறினார் நடிகை நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]