இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

படுகொலை

வெலிவேரிய – கிரிதிவெல வீதியின் ஹேனகம சந்தியில் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுபாகல, கண்டாவல பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தலை பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் பொலிஸாரின் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]