முகப்பு Cinema ‘இரும்புத்திரை’ படத்தின் 100வது நாள் கொண்டாட்டம்

‘இரும்புத்திரை’ படத்தின் 100வது நாள் கொண்டாட்டம்

சமூக வலைத்தளங்களில் நடக்கும் சில பிரச்சினைகளை மையப்படுத்தி உருவான திரைப்படம் ‘இரும்புத்திரை’.

அறிமுக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரித்ததோடு, விஷாலே கதாநாயனாகவும் நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளதோடு, வில்லனாக எக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருந்தார். அத்தோடு, ரோபோசங்கர், டெல்லி கணேஷ், காளி வெங்கட், வின்செண்ட் அசோகன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ஜார்ஜ் சி.வில்லியம் ஒளிப்பதிவு செய்ய, ரூபனின் படத்தொகுப்பில் படமாக்கப்பட்டது.

மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் அபிமன்யடு என் பெயரில் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்ட ‘இரும்புத்திரை’ தற்போது 100வது நாளை எட்டியுள்ளது.

இதனை கொண்டாடும் வண்ணம் ‘இரும்புத்திரை’ படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் விஷால், சமந்தா, அர்ஜூன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com