‘’நடிக்கவே தெரியவில்லை’’ என்று அவமானப்படுத்த பட்டவரின் சாதனை

சூர்யா (Suriya) முதல் முதலாக அறிமுகமான படம்  ‘நேருக்கு நேர்’. ஒரு சினிமா ஹீரோவுக்கே உரிய எந்த பயிற்சியும் இல்லாமல் அறிமுகமான சூர்யா கடும் சிரமங்களை சந்தித்தார். ‘’நடிக்கவே தெரியவில்லை’’ என்று அவமானப்படுத்தப்பட்டார். ஆனால் படங்களில் நடிப்பதை நிறுத்தி தன்னுடைய குறைகளை ஆராய்ந்த சூர்யா அதன் பிறகு எடுத்ததுதான் விஸ்வரூபம். ‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’, ‘உன்னை நினைத்து’, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, ‘பேரழகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’, ‘ஆறு’, ‘வேல்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’, ‘ஏழாம் அறிவு’ என்று பின்னிப் பெடலெடுத்தார்.

இந்நிலையில் சூர்யா திரையுலகிற்கு வந்து 2௦ வருடங்கள் கடந்து விட்டார். இதனால் உற்சாகமான சூர்யா ரசிகர்களுக்கு தனது நன்றியை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

suriya

20 வருட திரையுலக பயணம். நீங்கள் அனைவரும் அதை எனக்காக சாத்தியமாக்கினீர்கள்.உங்கள் கைத்தட்டல் என்னை உற்சாகப்படுத்தி என் எல்லைகளை விரிவாக்க வைத்தது. உங்கள் விமர்சனம் இன்னும் சிறப்பாக நான் கற்றுக்கொள்ள உதவியது. உங்கள் ஆதரவு, சினிமாவைத் தாண்டி என்னை செல்ல வைத்தது (அகரம் அறக்கட்டளை). இதையெல்லாம் விட. உங்கள் அன்பு, இன்னும் இந்த இயந்திரத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.

20 வருட பயணத்துக்கும், இனி பயணிக்க போகும் பல மைல் தூரத்துக்கும் உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்தார்.