இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இலங்கை இந்திய அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் கேப்டன் திசார பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 260 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை அணியின் பந்துவீச்சை துவசம் செய்தார். அவர் 43 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்களும் 14 நான்கு ஓட்டங்களும் அடங்கும். கே.எல். ராகுல் 89 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்த ஒரு இன்னிங்சில் மொத்தம் 21 சிக்சர்கள் மற்றும் 21 நான்கு ஓட்டங்களும் விளாசப்பட்டுள்ளது.

பந்துவீச்சில் திசார பெரேரா மற்றும் பெர்னாண்டோ தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தரங்க, குசல் பெரேரா, டிக்வெல ஆகியோரின் அதிரடியில் ரன்களைக் குவித்தனர்.

இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று 88 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பெரேரா 77 ஓட்டங்களையும், தரங்க 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்டுகளையும், யாதவ் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]