இருதய நோயாளியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஐயன்கேணி பாரதிபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தைத் தாம் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாரதிபுரம் கிராமவாசியான காளிக்குட்டி ஜெயக்குமார் (வயது 36 ) என்பவரின் சடலமே அவரது உறங்கல் அறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

இவர் நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மன விரக்தியில் உளன்றார் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவேயும் இவர் மன விரக்தி காரணமாக தன்னை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தவேளையில் தங்களால் காப்பாற்றப்பட்டவர் என்றும் உறவினர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]