இருதய சிகிச்சைக்கான ஸ்டென்ஸ் விலைக்குறைப்பு

இருதய சத்திரசிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டென்சின் விலையைக் குறைக்க சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய தினம் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் ராஜித இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வர்த்தக நிலையங்களில் 75,000 ரூபாவிற்கு விற்கப்படும் ஸ்டென்சின் விலை 24,000 ஆக குறைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2015 இலக்கம் 5இன் கீழான தேசிய மருந்து நியமன அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் ஸ்டென்ஸ் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இருதய நோயாளிகள் அதிகம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தமையினை கருத்திற்கொண்டே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]