இருதய சத்திரசிகிச்சைப் பிரிவுகளை புனரமைக்க நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் 60 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் ஒன்றின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளதுன. மற்றைய சத்திர சிகிச்சை கூடத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவில் பூர்த்தியடைந்து விடுமென சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

பழைய சத்திரசிகிச்சைக் கூடங்களில் கிருமிகள் பரவும் ஆபத்து காணப்படுகின்றமையால் அவற்றை புதுப்பிக்க தீர்மானிக்கப்படடுள்ளது. புனரமைப்புப் பணிகளை இலங்கை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com