இருட்டில் திருட்டுத்தனமாக என்னுடன் உறவு கொண்டதாக கிரிக்கெட் வீரர் மீது பெண் புகார்

நண்பன் என்ற போர்வையில் இருட்டில் வந்து திருட்டுத்தனமாக தன்னோடு உறவு கொண்டதாக கிரிக்கெட் வீரர் மீது பெண்ணொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெர்த்தை சேர்ந்த 23 வயது கிரிக்கெட் வீரர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுவருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இங்கிலாந்தில் Worcestershire CCC அணிக்கு ஒப்பந்த அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்ற 23 வயதான பெர்த்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரே இவ்வாறாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இருட்டில் தனது சக அணி வீரரின் தோழியுடன் உறவுகொண்டுள்ளார்.குறிப்பிட்ட பெண்ணும் தன்னோடு உறவு கொள்பவர் தனது நண்பர் என்ற நினைப்பிலிருந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அவுஸ்திரேலிய பாணியிலான பேச்சில் சந்தேகங்கொண்டு விளக்கை போட்டுப்பார்த்தபோது தான் வேறொருவருடன் உறவுகொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தான் பொலிஸில் முறையிட்டதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது இங்கிலாந்து நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவருகிறது.

எனினும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள பெர்த் கிரிக்கெட் வீரர், சம்பவம் இடம்பெற்ற அன்று குறிப்பிட்ட பெண் தன்னுடன் உறவுகொள்ள சம்மதித்ததாக கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]