உடல்நலம் தேறிவருகிறார் எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மாலை திருகோணமலையில் தங்கியிருந்த போது திடீரென இரா.சம்பந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து உடனடியாக அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரா.சம்பந்தனின் இந்திய விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]