இராணுவ வீரர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிளும், தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து, எல்ல பகுதியைச் சேர்ந்த கரந்தகொல்ல என்ற இடத்தில் 9ஆவது மைல் கல்லில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த பிரபாத் சானுக்க யாப்பா என்ற 25 வயது நிரம்பிய இராணுவ சிப்பாயே, விபத்தில் பலியானவராவார்.

விபத்து குறித்து எல்ல பொலிஸார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன், தனியார் பஸ் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

விபத்தில் பலியானவரின் சடலம், சட்ட வைத்திய பரிசோதனைக்கென பண்டாரவளை அரச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது. பின்னர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]