இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு

இரத்னமலானை– சாகிந்தாராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரரின் வீட்டிற்கு அருகில் இன்று காலை 7.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட இருவரும் தப்பிச்சென்றுள்ள நிலையில்; சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.