இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்

இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் கொக்கெலிய முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோதியதையடுத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, படுகாயமடைந்தவர்கள் 25 வயதுடைய அன்ரனி யோகேஸ்வரன் அனுஸாந்தன், 18 வயதுடைய அனுஸாந்தன் பவித்திரா என தெரியவந்துள்ளது.

தாண்டிக்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரினால் மேட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு சைகை செய்யப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிள் சாரதி சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]